ADDED : மார் 07, 2024 04:00 AM

ர்டில் கழிவுநீர் கால்வாய் வழியாக, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
வீட்டின் முன் கால்வாய்களை ஒட்டி வளர்ந்துள்ள புதர்களை அகற்றுவதில்லை.
புதர்களை அகற்ற துாய்மை பணியாளர்களிடம் கோரினால், அதற்கு தனியாக பணம் கேட்டு பெறுகின்றனர். கவுன்சிலருக்கு பதிலாக வார்டுக்குள் வந்த அவரது கணவரிடமும் முறையீட்டும் பலன் இல்லை.
மனுவும் கொடுத்தோம்!
இப்பகுதியில் உள்ள பிரச்னைகளை மனுவாக எழுதி, நகராட்சி குறைதீர் கூட்டத்தில் கொடுத்தோம். அதற்கு ஒரு போன் எண் கொடுத்து, கண்டிப்பாக ஊழியர்கள் வருவாங்க; சுத்தம் செய்து தருவாங்க என நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை யாரும் வரவில்லை. ஓட்டு கேட்டு வந்த போது கவுன்சிலரை பார்த்தோம்.
அதற்கு பின் அவரை பார்க்க முடியவில்லை. ஒரு சில முறை அவரது கணவர் மட்டுமே வந்து சென்றார். மக்கள் பிரச்னைகளை தீர்க்கத்தான் வார்டு கவுன்சிலரை தேர்ந்தெடுக்கிறோம்.
அவரும் எங்களது பிரச்னைகளை கண்டு கொள்ளாவிட்டால் யாரிடம் முறையீடுவது என தெரியவில்லை. இப்பகுதிக்கு எப்போது தான் விடிவு பிறக்கும் என காத்திருக்கிறோம்.
தீர்வு காணப்படுமா?
இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மையம் அருகே, காய்கறி கழிவுகள் மூட்டையாக குவிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மைதானத்தை பராமரித்து குழந்தைகள் விளையாட ஏற்பாடு செய்யலாம். ஆனால், அந்த இடம் பராமரிப்பின்றி உள்ளது.
சமுதாய கூடம் போதிய பராமரிப்பின்றி உள்ளது.
இப்பகுதி மட்டுமின்றி வார்டு பகுதியில், குப்பை, கழிவுநீர் பிரச்னைக்கு முறையான தீர்வு இல்லை.
பாதாள சாக்கடை 'லிப்டிங்' ஸ்டேஷனில், வெண்டிலேஷன் வைப்பதாக கூறியும் இதுவரை வைக்கவில்லை என, அடுக்கடுக்கான பிரச்னைகளை இப்பகுதி மக்கள் அடுக்கின்றனர்.
ஆனால், இதற்குரிய மக்கள் பிரதிநிதி, நகராட்சியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என தெரியவில்லை. வார்டில் உள்ள அடிப்படை பிரச்னைகளை கூட சீரமைக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

