/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் குடற்புழு நீக்க மருந்து விடுபட்டவர்கள் இன்று பெறலாம்
/
பள்ளிகளில் குடற்புழு நீக்க மருந்து விடுபட்டவர்கள் இன்று பெறலாம்
பள்ளிகளில் குடற்புழு நீக்க மருந்து விடுபட்டவர்கள் இன்று பெறலாம்
பள்ளிகளில் குடற்புழு நீக்க மருந்து விடுபட்டவர்கள் இன்று பெறலாம்
ADDED : ஆக 17, 2025 11:24 PM
கோவை; பள்ளிகளில் கடந்த, 11ம் தேதி குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. அதில் விடுபட்ட குழந்தைகளுக்கு, இன்று மருந்து வழங்கப்படவுள்ளது.
உலக மக்கள் தொகையில், 24 சதவீதம் பேர் மண் வாயிலாக, பரவும் குடற்புழு தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தொகையில், 1 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழித்தால் கூட, அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மண் வாயிலாகவும், மண்ணில் விளையும் பொருட்கள், மண்ணில் கை, கால்கள் படுவதன் வாயிலாகவும் தொற்று ஏற்படலாம்.
இதனால், குடற்புழு நீக்கும் திட்டம், ஆண்டுக்கு இருமுறை என்ற அடிப்படையில், 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 11ம் தேதி அனைத்து பள்ளிகள், அங்கன்வாடிகளில் குடற்புழு நீக்க மருந்து வினியோகிக்கப்பட்டது.
அன்றைய தினம் விடுபட்ட குழந்தைகள், இன்று மருந்தை பெற்றுக்கொள்ளலாம். விடுபட்டவர்கள் பட்டியல் பள்ளிவாரியாக தயார் செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடற்புழு நீக்க மருந்தை அப்படியே விழுங்காமல், சப்பி மென்று விழுங்கிய பின், தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.