ADDED : ஆக 24, 2025 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; மாணவரை தாக்கி, மொபைல் போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தைச் சேர்ந்தவர் அசோக். தனியார் கல்லுாரி மாணவரான இவரை, மர்ம நபர்கள், வழிமறித்து அடித்து, வெள்ளி செயின் மற்றும் மொபைல்போனை பறித்துச்சென்றனர்.
அவர் அளித்த புகாரின் பேரில், வடக்கிபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். அதில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள், திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த சிபி, 22; தனியார் கல்லுாரி மாணவர், 17 என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.