/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
' அ.தி.மு.க.,வுக்கு துரோகம் நினைத்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்!' எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆவேசம்

ADDED : ஆக 01, 2025 11:38 PM

பொள்ளாச்சி : 'அ.தி.மு.க., கட்சியை விட்டு சென்று துரோகம் நினைத்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போனது தான் உண்மை,' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் எம்.எல்.ஏ.,. பொள்ளாச்சி ஜெயராமன், நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆர்., அரசியல் வாரிசு என்றால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். அவரது அரசியல் வாரிசு பொதுச் செயலாளர் பழனிச்சாமி தான்.
மற்றவர்களை பற்றி நாங்கள் பேசுவதற்கு தயாராக இல்லை. ஒரே தலைவராக, கட்சியை காப்பாற்றக்கூடிய மாபெரும் சக்தியாக பழனிசாமி உள்ளார். யார், யாரை போய் சந்தித்தாலும் அது எள்ளவும் அ.தி.மு.க.,வை பாதிக்காது.
தமிழக மக்கள் அடுத்த முதல்வர் யார் என பரிசிலிக்கும் போது, மக்கள் மனதில் இடம் றெப்ற ஒரே தலைவர் பழனிச்சாமி.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மறைவுக்கு பின் எத்தனையோ பேர், கருணாநிதியிடம் ஐக்கியமானார்கள். அ.தி.மு.க.,வில் இருந்து அமைச்சர் பதவியை அனுபவித்தவர்கள், தி.மு.க.,வில் ஐக்கியமாயினர். அ.தி.மு.க.,வை விட்டு சென்று, இருந்த கட்சிக்கு துரோகம் நினைத்தவர்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டனர்.
தமிழகம் ஸ்டாலின் கையில் சிக்கி தவிக்கிறது. தமிழகத்தில், 'லாக் அப்' மரணம், பாலியல் தொல்லைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தி.மு.க.,விடம் இருந்து தமிழகத்தை காக்கும் ஒரே சக்தியாக அ.தி.மு.க., உள்ளது.
பொள்ளாச்சிக்கு சுற்றுப்பயணம் வரும் பொதுச்செயலாளர் பழனிச்சாமியை வரவேற்க ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள் வருவர்.
அதுவே ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும். வரும் சட்டசபை தேர்தலில், 200க்கும் மேற்பட்ட தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு, ஜெயராமன் கூறினார்.