/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமைச்சர் காரை மறிக்க முயற்சித்தவர்கள் கைது
/
அமைச்சர் காரை மறிக்க முயற்சித்தவர்கள் கைது
ADDED : ஜூலை 19, 2025 12:24 AM

போத்தனுார்: கோவை, மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று மாலை கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு, நீலம்பூர் - மதுக்கரை பை -- பாஸ் சாலை வழியாக காரில் சென்றார்.
முன்னதாக அவரது காரை மறித்து, தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தரக்கோரி, மனு கொடுக்க மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் உள்பட, 29 பேர் பொள்ளாச்சி சாலை சந்திப்பில், பதாகைகளுடன் காத்திருந்தனர்.
அவர்களை, மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
மதுக்கரையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டவர்கள், மாலை. 5:30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் மீது போலீஸ் எஸ்.ஐ., செந்தில்குமார் அளித்த புகாரின் படி, மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.