/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டை காலி செய்ய ரவுடிகளை வைத்து மிரட்டல்
/
வீட்டை காலி செய்ய ரவுடிகளை வைத்து மிரட்டல்
ADDED : அக் 04, 2024 11:28 PM
கோவை : வீட்டை காலி செய்யக்கோரி, ரவுடிகளை வைத்து மிரட்டிய வீட்டு உரிமையாளர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வக்கீலாக பணியாற்றி வருபவர் செல்வகுமார், 52. இவர் நஞ்சுண்டாபுரம், ஸ்ரீபதி நகரில் சியாமளா, 65 என்பவருக்கு சொந்தமான வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
செல்வகுமாரிடம்,வீட்டைகாலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் கேட்டுள்ளார். காலி செய்ய அவகாசம் வேண்டும் என்று செல்வகுமார் தெரிவிக்க, இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் ரவுடிகளை வைத்து, செல்வகுமாரை மிரட்டியதாக தெரிகிறது. பின்னர், செல்வகுமாரை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வரும்படி அழைத்துள்ளனர்.
இதனால், அவர் தனது நண்பரான மற்றொரு வக்கீலுடன் அங்கு சென்றார். அங்கு காரில் வந்த முத்தையா, 50, கண்ணன், 49 மற்றும் மூவர், தகாத வார்த்தைகளால் திட்டி, வீட்டை காலி செய்யும் படி மிரட்டினர்.
செல்வகுமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.