/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலத்தின் ஓடுதளத்தில் அச்சுறுத்தும் கம்பி; கான்கிரீட் பெயர்ந்துள்ளதால் அபாயம்
/
பாலத்தின் ஓடுதளத்தில் அச்சுறுத்தும் கம்பி; கான்கிரீட் பெயர்ந்துள்ளதால் அபாயம்
பாலத்தின் ஓடுதளத்தில் அச்சுறுத்தும் கம்பி; கான்கிரீட் பெயர்ந்துள்ளதால் அபாயம்
பாலத்தின் ஓடுதளத்தில் அச்சுறுத்தும் கம்பி; கான்கிரீட் பெயர்ந்துள்ளதால் அபாயம்
ADDED : செப் 02, 2025 08:04 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சீனிவாசபுரத்தில், ரயில்வே கீழ் மட்ட பாலத்தின் ஓடுதளத்தின் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால், விபத்துக்கள் ஏற்படுகிறது. உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், சீனிவாசபுரத்தில் ரயில்வே மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை இணைந்து, 26.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ் மட்ட பாலம் கட்டியது.கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம், பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
பொள்ளாச்சி - ஆனைமலை, திருச்சூர், சேத்துமடை, டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த தரைமட்ட பாலம் வழியாக செல்கிறது. தரைமட்ட பாலத்தின் ஓடுதளம் அவ்வப்போது பெயர்ந்து விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.
பாலம் மற்றும் ஓடுதளம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக நிறைவு பெறாத நிலையில், இந்த பாலத்தின் தளம் அடிக்கடி பெயர்ந்து வருகிறது. பாலத்தில் சிமென்ட் கலவை பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டுள்ளன.
பல இடங்களில் பெயர்ந்து குண்டும், குழியுமாக உருமாறியது. கான்கிரீட் கம்பிகள் வெளியே பெயர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றன.
பலனில்லை சிமென்ட் தளம் பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் விபத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். அவ்வப்போது, 'பேட்ச் ஒர்க்' பணிகள் நடந்தாலும் பலன் அளிப்பதில்லை.
கம்பிகளின் கூர்மையான பகுதி, வாகனங்களின் டயர்களில் குத்துவதால், 'பஞ்சர்' ஏற்படுகிறது. வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில் அமைக்கப்பட்ட தரைமட்ட பாலத்தில், ஓடுதளம் தரமின்றியுள்ளதால், படுமோசமாக காட்சியளிக்கிறது.குழிகள் ஏற்பட்டாலும் சரியான படி சீரமைப்பு பணி மேற்கொள்வதில்லை. சீரமைப்புபணி செய்யும் அதிகாரிகள் மீது அதிருப்தி தான் ஏற்படுகிறது.
இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் வேதனையுடன் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு பகுதிக்கு செல்லும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் அமைந்துள்ள தளத்தினை முறையாக சீரமைக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.