/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் அறைகளில் கஞ்சா பறிமுதல் மூவர் கைது
/
மாணவர் அறைகளில் கஞ்சா பறிமுதல் மூவர் கைது
ADDED : செப் 29, 2024 02:55 AM

கோவை:கோவை மாநகர பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. இங்கு, வெளியூர் மாணவர்கள் பலர், சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்துார், ஈச்சனாரி, சுந்தராபுரம், மதுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். சிலர் வெளியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
நேற்று காலை, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில், போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, மாணவர்களின் அறைகளில் தங்கியிருந்த, பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி, மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா வைத்திருந்த இரண்டு கல்லுாரி மாணவர்கள் என, மூவரை போலீசார் கைது செய்தனர்.