ADDED : அக் 31, 2024 10:21 PM
அ நிறம் | அளவு
வால்பாறை; வால்பாறையில், குடிபோதையில் ேஹாட்டலில் ரகளையில் ஈடுபட்ட மூன்று சுற்றுலா பயணியரை போலீசார் கைது செய்தனர்.
வால்பாறையை சுற்றி பார்க்க கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து, 10 பேர் அதிரப்பள்ளி வழியாக வந்தனர். வால்பாறை நகரில் உள்ள தனியார் ேஹாட்டலில் உணவு சாப்பிடும் போது, குடி போதையில் இருந்த அவர்கள், ேஹாட்டல் உரிமையாளரிடம் தகராறு செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடமும், கேரள சுற்றுலா பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு பணியை செய்ய விடாமல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜித்தோ, 30, சரத், 33, ஷாஜிப், 52, ஆகியோரை கைது செய்தனர்.
