ADDED : மார் 27, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: சட்டவிரோதமாக மது விற்ற மூவரும், கள் விற்ற ஒருவரும், கைது செய்யப்பட்டனர்.
அன்னூர் போலீஸ் எஸ்.ஐ.,கள் அப்துல் முத்தலிப் மற்றும் அழகேசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். இதில் அக்கரை செங்கப்பள்ளியில், 30 பிராந்தி பாட்டில்களுடன் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியம், 62. பிடிபட்டார்.
மூக்கனூர், பஸ் ஸ்டாப் அருகே ரவி, 59. 10 மது பாட்டில்களுடன் பிடிபட்டார். பசூர் பஸ் ஸ்டாப் அருகே, அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன், 40. என்பவர் 10 மது பாட்டில்களுடன் பிடிபட்டார்.
கணுவக்கரை அருகே ஆலபாளையத்தில் ஒரு தோட்டத்தில் 5 லிட்டர் கள் விற்பனைக்கு வைத்திருந்த ஈரோடு, பழனிச்சாமி, 74. என்பவர் பிடிபட்டார். போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
