/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை பறிப்பில் ஈடுபட்ட மூவருக்கு 'குண்டாஸ்'
/
நகை பறிப்பில் ஈடுபட்ட மூவருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 26, 2025 10:02 PM
போத்தனுார்; கோவை சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவில், உதவி கமிஷனர் கனகசபாபதி மேற்பார்வையில், ஐந்து பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள், சம்பவம் நடந்த இடம் மற்றும் தொடர்ச்சியான சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, திருப்பூரை சேர்ந்த அரவிந்த் யுவராஜ், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, எட்டு சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
மூவருக்கும் பிற மாவட்டங்களிலும் நகை பறிப்பு, திருட்டு வழக்குகள் இருப்பது தெரிந்தது. மூவரையும் குண்டாஸ் சட்டத்தில் சிறையிலடைக்க கமிஷனர் உத்தரவிட்டார்.