/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா, போதை வஸ்து வைத்திருந்த மூவர் கைது
/
கஞ்சா, போதை வஸ்து வைத்திருந்த மூவர் கைது
ADDED : நவ 13, 2024 06:31 AM
குன்னுார் : குன்னுாரில், 11.4, கிலோ போதை வஸ்து மற்றும் 325 கிராம் கஞ்சா வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில், அருவங்காடு எஸ்.ஐ., ஜெயரத் தலைமையில், தனிப்பிரிவு காவலர் காஜா மொய்தீன், காவலர்கள் ரத்தினராஜ், ராம்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கரோலினா பகுதியில் சோதனை நடத்தினர். அதில், சந்தோஷ், 27 என்பவரிடம் இருந்து, 325 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவரின் நண்பர்களான, மேட்டுப்பாளையம் மசூதி தெருவை சேர்ந்த, 20 வயதான இரு இளைஞர்களிடம், 11.4 கிலோ போதை வஸ்து பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
மூவரும் கைது செய்யப்பட்டு, குன்னுார் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி குன்னுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.