/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா, மெத்தாபீட்டமைன் கடத்தல்; மூவர் கைது
/
கஞ்சா, மெத்தாபீட்டமைன் கடத்தல்; மூவர் கைது
ADDED : ஜூலை 20, 2025 01:20 AM
கோவை: விற்பனைக்காக வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா, போதைப்பொருட்களை கடத்தி வந்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரத்தினபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சத்தி ரோடு, சாஸ்திரி நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் வீதியில், சந்தேகத்துக்கு இடமான வகையில் மூன்று பேர் நின்றிருந்தனர். அவர்களை பிடித்த போலீசார் சோதனையிட்டனர். அவர்களிடம் கஞ்சா, போதைப்பொருளான மெத்தாபீட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள், நீலகிரி மாவட்டம் கூடலுாரை சேர்ந்த யோகி சேதுபதி, 21, பஷீர் அப்துல்லா, 23, அபிஷேக், 21 எனத் தெரிந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்தது தெரிந்தது.
மூவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.1.60 லட்சம் மதிப்பிலான மெத்தாபீட்டமைன், 1.300 கிலோ கஞ்சா, ரூ.4,000 ரொக்கம், எலக்ட்ரானிக் எடை எந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.