/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருடிய மூவர் கைது
/
வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருடிய மூவர் கைது
வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருடிய மூவர் கைது
வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருடிய மூவர் கைது
ADDED : செப் 19, 2024 10:09 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பைக் திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, வடக்கிபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன்,20. இவர், வீட்டின் முன் கடந்த மாதம், 29ம் தேதி நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது. இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், மதுக்கரை போலீசார், பைக் திருட்டில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த ஜெகதீஸ்,24, என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், பரமக்குடியை சேர்ந்த, 17 வயது சிறுவன், சபரிகண்ணன், 19, என்பவர்களுடன் சேர்ந்து, பொள்ளாச்சி பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதற்கிடையே, வடக்கிபாளையம் போலீசார், சி.கோபாலபுரம் அருகே பரமக்குடியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் சபரிகண்ணனை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மகாலிங்கபுரம், கிழக்கு மற்றும் வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், பைக் திருடியது தெரியவந்தது.
மேலும், 17 வயது சிறுவன் மீது, ஏற்கனவே, ஆறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, சிறுவன் கூர்நோக்கு இல்லத்திலும், சபரிகண்ணன் பொள்ளாச்சி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். மதுக்கரையில் கைதான ஜெகதீஸ், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.