ADDED : ஜன 19, 2026 06:35 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து மூன்றரை பவுன் நகை மற்றும் லேப்டாப் திருடிய மூன்று பேரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி, ஜோதிநகர் 'டி' காலனியை சேர்ந்தவர் ேஷக் ஜாவித்,37; ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த, 14ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, நாகப்பட்டிணத்தில் உள்ள தர்காவிற்கு சென்று நேற்றுமுன்தினம் வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்டவை காணவில்லை. இது குறித்து அவர், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் அடிப்படையில், திருட வந்தவர்களின் இருசக்கர வாகன எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவப்பிரகாஷ், 37, கோவை கணபதியை சேர்ந்த ஹரிகுமார்,22, காரமடையை சேர்ந்த சந்திரபாபு,35. என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்து, நகை மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.
