ADDED : ஜூன் 06, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; கோவையை அடுத்த துடியலூரை சேர்ந்தவர் சபரீஷ், 37. இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் காரில் சென்று கொண்டிருந்தார்.
சாமநாயக்கன்பாளையம் அருகே சென்ற போது மூன்று பேர் லிப்ட் கேட்டனர்.அவர்களை சபரீஷ் காரில் ஏற்றிக் கொண்டார். சிறிது துாரம் சென்றதும் அவர்கள் காரை நிறுத்த சொன்னார்கள்.
கார் நின்றதும் அருண்பாண்டி,24,முருகன்,28, பழனி முருகன்,40, ஆகியோர் சபரீஷ் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்கச் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
இது குறித்து சபரீஷ் பெரியநாயக்கன்பாளையம்,ேபாலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணை முடிவில் நகை பறித்த அருண்பாண்டி உள்ளிட்ட மூவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.