தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்கூட்டரை பறித்து தப்பிய மூவர் கைது

 ஸ்கூட்டரை பறித்து தப்பிய மூவர் கைது

 ஸ்கூட்டரை பறித்து தப்பிய மூவர் கைது


ADDED : பிப் 25, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்: குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையம். மணிகண்டன் நகரை சேர்ந்தவர் கவின், 22. ஞானபுரத்தில் இவரது மாமாவின் இரும்பு கடையில், அவருக்கு உதவியாக இருந்து வருகிறார். கடந்த, 22ல் இவர் தனது நண்பரான சனூப் என்பவரை இரும்பு கடையிலிருந்து, பி.கே. புதூர், விஜயலட்சுமி லே - அவுட்டிலுள்ள அவரது வீட்டில் இறக்கிவிட, தனது ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். வழியில் இவருக்கு அறிமுகமான சிகாபுதீன், கைப் உள்ளிட்ட நான்கு பேர் தங்களை வாகனத்தில் அழைத்துச் செல்ல கேட்டனர்.

சனூப்பை இறக்கிவிட்ட பின் திரும்பி வந்த கவின், நால்வரையும் ஏற்றிக்கொண்டு கடைக்கு வந்தார். அப்போது அவர்கள் தங்களை இடையர்பாளையம், பி.எம்.ஆர். சாலை சந்திப்பில் இறக்கிவிட கூறியுள்ளனர். அவ்விடத்தில் ஸ்கூட்டரை நிறுத்திய போது, சிகாபுதீன் ஸ்கூட்டரின் சாவியை எடுத்தார். அவரது மொபைல்போனையும் பறித்தனர். தொடர்ந்து நால்வரும் அங்கிருந்து ஸ்கூட்டருடன் தப்பினர். கவின் புகாரில் குனியமுத்தூர் போலீசார் சிகாபுதீன் உள்பட மூவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us