/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் சென்றவரை மிரட்டி தாக்கிய மூவர் கைது
/
சாலையில் சென்றவரை மிரட்டி தாக்கிய மூவர் கைது
ADDED : டிச 25, 2024 10:26 PM
தொண்டாமுத்தூர்; ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் ஆருத்ரா, 34; பெயின்டர். இவர், ஆலாந்துறை அடுத்த கிளியகவுண்டன் புதூரில் தங்கி, வேலைக்கு சென்று வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு, ஆருத்ரா தனது வீட்டிலிருந்து கடைக்கு, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 27, ரவி, 43, மனோஜ் குமார், 32 ஆகிய மூவரும் மது போதையில் ஆருத்ராவை வழிமறித்து, தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். தகராறு ஏற்பட்டதில், உடலில் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளனர்.
அப்போது, ஆருத்ராவின் கழுத்தில் இருந்த, 3 பவுன் செயின் தவறி கீழே விழுந்தது. அருகில் இருந்தவர்கள், மூவரிடமிருந்தும் ஆருத்ராவை மீட்டு, பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கூறி, ஆலாந்துறை போலீசில், ஆருத்ரா புகார் அளித்தார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டன், ரவி, மனோஜ் குமார் ஆகிய மூவரையும், கைது செய்தனர்.

