ADDED : ஏப் 02, 2025 06:55 AM
கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டியில் பைக் திருடர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரி பிரசாத், 25. கடந்த, ஜன., 30ம் தேதி இரவு தனது வீட்டுக்கு வெளியே பைக்கை நிறுத்தி விட்டு துாங்க சென்றார்.
காலையில் பார்த்தபோது, பைக் திருடப்பட்டது தெரிந்தது. இதேபோல், கணியூரில் வருண் என்பவருக்கு சொந்தமான பைக்கும் திருடு போனது, இது குறித்த புகார்களின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ஈரோடு மாவட்டம், மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த நாகராஜ், 26, சேலம் பனக்காட்டை சேர்ந்த பிரகாஷ், 25,மதுரை மேலூரை சேர்ந்த சசிக்குமார், 26 ஆகியோர், பைக்குகளை திருடி சென்றது தெரிந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

