/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜமீன் ஊத்துக்குளியில் முப்பெரும் விழா
/
ஜமீன் ஊத்துக்குளியில் முப்பெரும் விழா
ADDED : செப் 17, 2025 08:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியில் தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி கைகாட்டியில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா, தி.மு.க.தோற்றுவிக்கப்பட்ட நாள், சமூக நீதி நாள் என முப்பெரும் விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி தலைமை வகித்தார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரூராட்சி துணை தலைவர் சையது அபுதாஹிர் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.