/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் முப்பெரும் விழா கலைநிகழ்ச்சி அரங்கேற்றம்
/
பள்ளியில் முப்பெரும் விழா கலைநிகழ்ச்சி அரங்கேற்றம்
பள்ளியில் முப்பெரும் விழா கலைநிகழ்ச்சி அரங்கேற்றம்
பள்ளியில் முப்பெரும் விழா கலைநிகழ்ச்சி அரங்கேற்றம்
ADDED : நவ 11, 2024 06:45 AM

வால்பாறை : வால்பாறை திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
வால்பாறை திருஇருதய மேல்நிலைப்பள்ளியில், 41ம் ஆண்டு விளையாட்டு விழா, கலை விழா, பரிசளிப்பு விழா, என, முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சவுமியா தலைமை வகித்தார். திரு இருதய ஆலயபங்கு தந்தை ஜெகன்ஆண்டனி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவிகளுக்கு, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சுப்ரமணியன், தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், நகராட்சி கவுன்சிலர் பாஸ்கர் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.
விழாவில், மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள், மாணவர் தலைவர், துணைத்தலைவர் செய்திருந்தனர்.