ADDED : நவ 03, 2025 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:  பொள்ளாச்சி, கிணத்துக்கடவு அருகே நடந்த வாகன விபத்தில் மூவர் காயம் படுகாய மடைந்தனர்.
உடுமலையை சேர்ந்தவர் சுஜித், 21. இவர், சரவணம்பட்டி செல்ல பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவு அருகே சென்ற போது, முன்னால் சென்ற பைக் திடீரென வலது பக்கமாக திரும்பியுள்ளது.
அப்போது, எதிர்பாரத விதமாக இரு பைக்களும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுஜித், மற்றொரு பைக்கில் சென்ற வடக்கிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், வள்ளியம்மாள் என, மூவரும் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்தோர், மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

