/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்; நால்வர் கைது
/
மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்; நால்வர் கைது
ADDED : அக் 17, 2025 11:34 PM
போத்தனூர்: கோவை, கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. சசிகலா. நேற்று முன்தினம் போலீசாருடன் ஆசாத் நகரில் ரோந்து சென்றார். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்றிருந்தவரிடம் விசாரித்தார். அதே பகுதியில் வசிக்கும் அப்பாஸ் மொய்தீன், 27 என்பதும், விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது. கஞ்சாவுடன் அப்பாஸ் மொய்தீன் கைது செய்யப்பட்டார்.
* போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாடசாமி நேற்று முன்தினம் கஞ்சிக்கோனாம்பாளையம், மயான பகுதியில் ரோந்து சென்றார். அங்கு நின்றிருந்த மூவரிடம் விசாரிக்க முயன்றார். இருவர் ஓடிவிட்டனர்.
மற்றொருவரிடம் விசாரித்தபோது குறிச்சி, உப்பிலியர் திட்டை சேர்ந்த லிங்கபூபதி மற்றும் சல்மான்கான், சகானா பாத்திமா என தெரிந்தது. விற்பனைக்காக, 1.1 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. கஞ்சாவுடன் லிங்க பூபதி கைது செய்யப்பட்டார். தப்பிய இருவரை தேடுகின்றனர்.
* மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., செல்வம், குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட தனியார் மருத்துவமனை ஒன்றின் அருகே ரோந்து சென்றார். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரித்தார். ஆத்துபாலம், அண்ணா நகரை சேர்ந்த தற்போது அறிவொளி நகரில் வசிக்கும் தனபால், 35, மற்றும் முத்துசாமி சேர்வை வீதியை சேர்ந்த நாகேந்திரன், 35 என தெரிந்தது. விற்பனைக்காக, 950 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.