/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்
/
கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்
ADDED : அக் 17, 2025 11:34 PM
கோவை: மதுரை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் பீர்தவுஸ்ராஜா.45. சிறுவயதிலேயே கோவைக்கு வந்த இவர், பிளாட்பார்மில் தங்கி கூலி வேலைக்கு சென்றார்.
இவருக்கும், பெற்றோரால் கை விடப்பட்டு, சாலையோரத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்ற, 16 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். 2023, நவ.,14 ல், நடைபாதையில் தங்கியிருந்த ரவி,50, என்பவருடன் சேர்ந்து மது குடித்தனர்.
அப்போது, பீர்தவுஸ்ராஜாவும், சிறுவனும் சேர்ந்து, ரவியிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றனர். ரவி எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து ரவியை கல்லால் தாக்கி கொலை செய்தனர்.
ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, முகமது பீர்தவுஸ் ராஜா மற்றும் 16 சிறுவனை கைது செய்தனர். முகமது பீர்தவுஸ் ராஜா மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட முகமது பீர்தவுஸ்ராஜாவுக்கு ஆயுள்சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். 16 வயது சிறுவன் மீதான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருகிறது.