/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று மாத கால ரோபோ பயிற்சி மண்டல அறிவியல் மையம் அறிவிப்பு
/
மூன்று மாத கால ரோபோ பயிற்சி மண்டல அறிவியல் மையம் அறிவிப்பு
மூன்று மாத கால ரோபோ பயிற்சி மண்டல அறிவியல் மையம் அறிவிப்பு
மூன்று மாத கால ரோபோ பயிற்சி மண்டல அறிவியல் மையம் அறிவிப்பு
ADDED : நவ 14, 2024 05:04 AM
கோவை: கோவை கொடிசியா சாலையில் அமைந்துள்ள, மண்டல அறிவியல் மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மூன்று மாத கால ரோபோ பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில், அடிப்படை தொழில்நுட்பம், லாஜிக் சார்ந்த ரோபோ, கோடிங், யூசர் கன்ரோல்டு உள்ளிட்டவை வல்லுநர்களால் செய்முறை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 12 வாரங்கள் ஞாயிறு தோறும் பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளது. முதலில் பதிவு செய்யும், 50 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பயிற்சி கட்டணமாக, 4000 ரூபாய் செலுத்தவேண்டும். ஆர்வமுள்ளவர்கள், டிச., 10 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும், விபரங்களுக்கு 8523909178/ 0422-2963026/2963024 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பயிற்சிகள் நடத்தப்படுவதாக, மாவட்ட அறிவியல் அலுவலர் (பொறுப்பு) சுடலை தெரிவித்தார்.