/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று புதிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விரைவில் சொந்த கட்டடம்: கமிஷனர்
/
மூன்று புதிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விரைவில் சொந்த கட்டடம்: கமிஷனர்
மூன்று புதிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விரைவில் சொந்த கட்டடம்: கமிஷனர்
மூன்று புதிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விரைவில் சொந்த கட்டடம்: கமிஷனர்
ADDED : மே 27, 2025 07:41 AM
கோவை : புதிதாக துவங்கப்பட்ட மூன்று போலீஸ் ஸ்டேஷன்களுக்கான இடம் தேர்வு விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரில், தற்போது, 17 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும், 3 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் என, 30 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன.
நிர்வாக காரணங்களுக்காக, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் ஆகிய இடங்களில், 3 புதிய போலீஸ் ஸ்டேஷன்கள், மற்றும் தெற்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டன.
கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் ஆயிஷா மஹால் அருகிலும், கவுண்டம்பாளையம் ஸ்டேஷன் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்திலும், சுந்தராபுரம் ஸ்டேஷன் சிட்கோ அருகிலும் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில், அவற்றை சொந்த கட்டடத்துக்கு மாற்ற, மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றை ஒதுக்க, மாநகராட்சி மற்றும் வருவாய் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறுகையில்,''சுந்தராபும், கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்கள் கட்ட, மாநகராட்சி மற்றும், வருவாய் துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்புதல் வழங்கப்பட்டு, விரைவில் இடம் ஒதுக்கப்பட உள்ளன. கரும்புகடை போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதற்கான இடம் தேடுதல் நடந்து வருகிறது. விரைவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும், சொந்த கட்டடங்களுக்கு மாறும்,'' என்றார்.