ADDED : ஏப் 02, 2026 06:56 PM
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிட, பகுஜன் சமாஜ் கட்சி உட்பட மூன்று பேர், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கான வேட்பு மனுக்கள், கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பெறப்படுகிறது. வேட்பு மனுக்களை ஆர்.டி.ஓ., வினோத்குமாரிடம் தாக்கல் செய்ய வேண்டும். இத்தொகுதியில் ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கலாவதி ஜெகநாதன் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேற்று, பகுஜன் சமாஜ் கட்சியின் வேல்முருகன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பாலமுருகன், ராஜலிங்கம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கவுண்டம்பாளையம் தொகுதியில் இதுவரை நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இரண்டு சுயேட்சைகள் உட்பட நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இத்தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் கனிமொழி சந்தோஷ், நாளை காலை 11:00 மணிக்கு மனு தாக்கல் செய்கிறார். வரும் 6ம் தேதி அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் அருண்குமார் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
