/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூவரிடம் ரூ.27.82 லட்சம் மோசடி; சைபர்கிரைம் போலீசார் விசாரணை
/
மூவரிடம் ரூ.27.82 லட்சம் மோசடி; சைபர்கிரைம் போலீசார் விசாரணை
மூவரிடம் ரூ.27.82 லட்சம் மோசடி; சைபர்கிரைம் போலீசார் விசாரணை
மூவரிடம் ரூ.27.82 லட்சம் மோசடி; சைபர்கிரைம் போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 23, 2025 12:39 AM
கோவை; கோவை கணபதியை சேர்ந்த, ஓய்வு பெற்ற பேராசிரியை ஒருவரின் மொபைல்போனுக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் பெறலாம் என்ற தகவல் வந்தது. அதில் இருந்த எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசியவர், 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்' என்றார். அதை நம்பி பேராசிரியை, ரூ.15.42 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணமும் திரும்ப தரப்படவில்லை.
கோவையை சேர்ந்த தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டு நிறுவன அலுவலரிடம் ரூ.7.40 லட்சம், ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் என, மொத்தம் ரூ.27.82 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
மூவரும் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.