தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மும்முனை மோட்டாரின் தரம் பி.ஐ.எஸ். விழிப்புணர்வு

 மும்முனை மோட்டாரின் தரம் பி.ஐ.எஸ். விழிப்புணர்வு

 மும்முனை மோட்டாரின் தரம் பி.ஐ.எஸ். விழிப்புணர்வு


ADDED : பிப் 02, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்.,) கோவை கிளை சார்பில், கோ இண்டியா வளாகத்தில், மும்முனை மோட்டார்களில் பி.ஐ.எஸ்., தரம் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

திறன் மற்றும் செயல்பாடு சார்ந்தும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. பி.ஐ.எஸ்., கோவை தலைவர் பவானி, திட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கினார்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ், இந்தியன் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்க (இப்மா) தலைவர் கார்த்திக் ஆகியோர், மின்சக்தி திறன் தரநிலைகள் மற்றும் தரநிர்ணயம் வகுப்பதில், தொழில்துறையினரின் பங்களிப்பு குறித்து விளக்கினர்.

பி.ஐ.எஸ்., இயக்குநர் வினித்குமார், இணை இயக்குநர் ஜோத்ஸ்னா பிரியா ரகு உள்ளிட்ட விஞ்ஞானிகள் தர நிலைகளைப் பேணுவது குறித்த விழிப்புணர்வு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட மோட்டார், பம்ப் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us