/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ., போட்டியில் 'செஞ்சுரி' அடித்து மூன்று வீரர்கள் 'சரவெடி'
/
சி.டி.சி.ஏ., போட்டியில் 'செஞ்சுரி' அடித்து மூன்று வீரர்கள் 'சரவெடி'
சி.டி.சி.ஏ., போட்டியில் 'செஞ்சுரி' அடித்து மூன்று வீரர்கள் 'சரவெடி'
சி.டி.சி.ஏ., போட்டியில் 'செஞ்சுரி' அடித்து மூன்று வீரர்கள் 'சரவெடி'
ADDED : மே 27, 2025 08:27 PM

கோவை : முதலாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் மூன்று வீரர்கள், 100 ரன்களை அதிரடியாக கடந்து, ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினர்.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், முதலாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட கல்லுாரி மைதானங்களில் நடந்து வருகிறது. ஆர்.கே.எஸ். கிரிக்கெட் அகாடமியும், ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
பேட்டிங் செய்த ஆர்.கே.எஸ். அணியினர், 21.6 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 50 ரன் எடுத்தது. எதிரணி வீரர் ராகுல், ஏழு விக்கெட்கள் வீழ்த்தினார். ஜாலி ரோவர்ஸ் அணியினர், 10.4 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 52 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
இரண்டாம் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 304 ரன்கள் எடுத்தனர்.
வீரர் விஜய் அபிமன்யு, 106 ரன்களும், நதீர், 101 ரன்களும், நவீன்குமார், 34 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். எதிரணி வீரர் மிதுன் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
இ.ஏ.பி. அணியினர், 47 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 244 ரன்கள் எடுத்தனர். வீரர் ராஜகணபதி, 114 ரன்களும், பெருமாள் சாமி, 63 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.