/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரையிறுதிக்குள் நுழைந்த மூன்று பள்ளிகள்
/
அரையிறுதிக்குள் நுழைந்த மூன்று பள்ளிகள்
ADDED : டிச 20, 2025 05:33 AM

கோவை டிச. 20-: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்திய, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், பங்கேற்ற மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: சிங்காநல்லூரில் உள்ள இப்பள்ளியில் நடந்த, தகுதி சுற்றில் 286 மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர். 'எச்' அணியின் ஹரிஷ்மிதா, மகாலெட்சுமி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல்வர் கீதா சுதர்சன் இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார்.
விவேகானந்தா கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளி: இருகூரில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில், 180 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர்.
'எச்' அணியின் பிரகதி, சவுமித்ரா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி இயக்குனர் சுந்தரநாதன், முதல்வர் வனிதாமணி இறுதி போட்டியில் பங்கேற்ற, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: சிங்காநல்லூரில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில், 250 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர். 'ஏ' அணியின் ஹரி பிரசன்னா, அகிலேஷ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். துணை முதல்வர் இந்திரா இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார்.

