/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மூன்று கடைகள் அகற்றம்
/
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மூன்று கடைகள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மூன்று கடைகள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மூன்று கடைகள் அகற்றம்
ADDED : ஜூன் 10, 2025 09:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; புலியகுளம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மூன்று கடைகளை, மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அகற்றினர்.
மாநகராட்சி மத்திய மண்டலம், 66வது வார்டு புலியகுளம் பகுதியில், பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக பூஜை பொருட்கள், பூ கடைகள் செயல்பட்டு வந்தன.
ரோட்டை ஒட்டி இருந்த இக்கடைகளால் வாகன ஓட்டிகள் திணறிய நிலையில், கடைகளை அகற்றுமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். நேற்று காலை இரண்டு பூஜை பொருட்கள் விற்பனை கடை, ஒரு பூ கடை என, மூன்று கடைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.