/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் முழங்கிய திருச்சூர் பஞ்சரி மேளம்
/
கோவையில் முழங்கிய திருச்சூர் பஞ்சரி மேளம்
ADDED : ஆக 31, 2025 11:28 PM
கோவை; கோவையில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடந்த, பஞ்சரி மேளம் இசை நிகழ்ச்சி, அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கேரளா, திருச்சூர் பூரம் புகழ்பெற்ற பஞ்சரி மேளம் இசை நிகழ்ச்சி, கோவை, கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடந்தது.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற பெருவனம் குட்டன் மாரார் தலைமையிலான, 60க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.
இதில், 2 மணி நேரத்திற்கும் மேலாக, இடைவிடாமல் ஒலித்த, செண்டை, குழல், கொம்பு, இலத்தாளம் ஆகிய இசைக்கருவிகளின் இசை ஒலியால், கவரப்பட்ட பார்வையாளர்கள், கைகளை உயர்த்தி நடனமாடினர்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் மற்றும் ஏராளாமானோர் பங்கேற்றனர்.