/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
11 கிலோ கஞ்சா மூட்டையை ஸ்டேஷனில் வீசிவிட்டு ஓட்டம்
/
11 கிலோ கஞ்சா மூட்டையை ஸ்டேஷனில் வீசிவிட்டு ஓட்டம்
11 கிலோ கஞ்சா மூட்டையை ஸ்டேஷனில் வீசிவிட்டு ஓட்டம்
11 கிலோ கஞ்சா மூட்டையை ஸ்டேஷனில் வீசிவிட்டு ஓட்டம்
ADDED : டிச 19, 2025 05:01 AM
கோவை,டிச.19- கோவை ரயில்வே ஸ்டேஷனில் கிடந்த, 11 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மதுவிலக்கு பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று முன்தினம் இரவில் சோதனை செய்தனர். ஒன்றாவது பிளாட்பாரத்தில், கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டையை எடுத்து பிரித்து பார்த்தனர். அதற்குள் 11 கிலோ கஞ்சா இருந்தது.
லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கஞ்சா கடத்தி வந்த நபர்கள், போலீஸ் சோதனை நடத்துவதை பார்த்ததும், மூட்டையை அங்கேயே வீசிவீட்டுசென்றது தெரிய வந்துள்ளது. மது விலக்குபிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து விசாரிக்கின்றனர்.