தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை சுற்றுவட்டாரத்தில் இடியுடன் ஆலங்கட்டி மழை

 கோவை சுற்றுவட்டாரத்தில் இடியுடன் ஆலங்கட்டி மழை

 கோவை சுற்றுவட்டாரத்தில் இடியுடன் ஆலங்கட்டி மழை


ADDED : மார் 18, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பல்வேறு பகுதிகளிலும் பெய்த கோடை மழையால், கோவை நகரம் குளிர்ச்சியடைந்தது.

கோவையில் முன் எப்போதும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டு பிப்., இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியது.

மக்கள் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க இளநீர், தர்பூசணி பழம் ஆகியவற்றை தேடத் துவங்கினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, அன்னுார், கோவில்பாளையம், விளாங்குறிச்சி, காளப்பட்டி, கோல்டுவின்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

நேற்று மாலை காந் திபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம், சாய்பாபா காலனி, வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

மதுக்கரை, கோவைபுதூர், அறிவொளி நகர், அண்ணா நகர், திருமலையாம்பாளையம், சீராபாளையம் உள்ளிட்ட பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பின், ஆலங்கட்டி மழை பெய்தது.

குழந்தைகள் ஐஸ் கட்டிகளை கையில் சேகரித்து குதுாகலமடைந்தனர். திடீர் மழையால் கோவை நகரம் குளிர்ச்சியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us