sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனங்களின் வளத்துக்கு புலிகளே முக்கிய காரணம்! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்

/

வனங்களின் வளத்துக்கு புலிகளே முக்கிய காரணம்! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்

வனங்களின் வளத்துக்கு புலிகளே முக்கிய காரணம்! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்

வனங்களின் வளத்துக்கு புலிகளே முக்கிய காரணம்! விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்


ADDED : ஜூலை 31, 2025 09:40 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 09:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; 'வனங்களின் வளத்திற்கு புலிகள் முக்கியக் காரணமாக விளங்குவதால், புலிகளே வனத்தின் காவலன்,' உலக புலிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தெரிவிக்கப்பட்டது.

ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு புலிகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைமையாசிரியர் கிட்டுச்சாமி தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில், இயற்கை பாதுகாப்புக்கான உலகளாவிய நிதியம் அமைப்பின் பொறுப்பாளர் நவீன் மற்றும் என்.ஜி.எம்.,கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், புலிகளின் தற்போதைய நிலவரம் அதனை பாதுகாப்பானது மற்றும் வாழ்கை முறை பற்றி விரிவாக பேசினர்.

புலி இந்தியாவின் தேசிய விலங்கு, உலகிலுள்ள புலிகளில் எண்ணிக்கையில், 75 சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன. வனங்களின் வளத்திற்கு புலிகள் முக்கியக் காரணமாக விளங்குவதால் புலிகளை வனத்தின் காவலன் என விளக்கப்பட்டது.

மேலும், பள்ளியில் நடைபெற்ற புலிகள் தின விழிப்புணர்வு கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

விழிப்புணர்வு பேரணி புலிகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி, ஆழியாறில் நடந்தது. பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன் முன்னிலை வகித்தார்.

பேரணியை நீலகிரி வரையாடுகள் திட்ட துணை இயக்குனர் கணேஷ்ராம் துவக்கி வைத்து பேசியதாவது:

வனத்தை காப்பதில் புலிகளில் பங்கு முக்கியமானது. உலகளவில் ஒரு லட்சம் புலிகள் இருந்தன. இந்தியாவில் மட்டும், 6,862 புலிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும், 306 புலிகள் உள்ளன.

புலிகள் பாதுகாப்பிற்காக களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, மேகமலை என புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒதுக்கப்படும் நிதியை கொண்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, பேசினார்.

பேரணியில் தனியார் கல்லுாரி மாணவர்கள், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர். ஆழியாறு பூங்கா பகுதியில் தொடங்கிய பேரணி, வால்பாறை சாலையில் மின்வாரிய குடியிருப்பு, அறிவுத்திருக்கோயில், வனத்துறை சோதனைச்சாவடி வழியாக கவியருவியை சென்றடைந்தது.

பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், புலிகளின் வழித்தடத்தை காப்பது, புலிகளின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுதல், பிளாஸ்டிக் கவர்களை வனப்பகுதிக்குள் இல்லாமல் ஒழிப்பது, புலிகளை காப்பதன் வாயிலாக வளத்தையும், வனத்தில் வாழும் உயிரினத்தையும் காக்க முடியும் என, விழிப்புர்ணவு வாசகங்களுடன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us