/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக., 22ல் போராட்டம் டிக்டோஜாக் அறிவிப்பு
/
ஆக., 22ல் போராட்டம் டிக்டோஜாக் அறிவிப்பு
ADDED : ஜூலை 25, 2025 03:36 PM
ராமநாதபுரம்: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், ஆக.22ல் சென்னை கோட்டையில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
டிக்டோஜாக் இணைப்பு சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, மாவட்டந்தோறும் அண்மையில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு டிக்டோஜாக்கின் கோரிக்கைளை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. அடுத்தக்கட்டமாக, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆக., 22 சென்னையில் கோட்டை மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம்.
மாநிலம் முழுவதும் இருந்து, 50,000 பங்கேற்கவுள்ளனர். ஆசிரியர்களை அணி திரட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கான ஆயத்தக் கூட்டம் ஆக., 6, 7 ஆகிய தேதிகளில் வட்டார அளவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூலை, 29, 30 நிதியமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து முறையிடவுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.