தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டைல்ஸ் பதிப்பு கலவை; 2 அங்குலமா 4 அங்குலமா?

 டைல்ஸ் பதிப்பு கலவை; 2 அங்குலமா 4 அங்குலமா?

 டைல்ஸ் பதிப்பு கலவை; 2 அங்குலமா 4 அங்குலமா?


ADDED : மார் 07, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மு ன்பெல்லாம் வெதரிங் கோர்ஸ் என்று கருங்கல், ஜல்லி, கடுக்காய் சுண்ணாம்பு ஆகியவற்றை போடுவோம். இப்போது 'கூல் ரூப் டைல்ஸ்' என ஒன்று வந்திருக்கிறது.

இந்த டைல்ஸ் ஒட்டும் முன் சிலர் கான்கிரீட் கூரையில் வாட்டர் புரூபிங் செய்ய வேண்டும் என்றும், சிலர் 'எபாக்சி கிரவுடிங்' ஆயிலை ஆறு கோட்டிங் அளவுக்கு அடிக்க வேண்டும், சிலர் 2 அங்குலம் கலவை கனம் ஏற்ற வேண்டும் என்றும் கூறுவதாக வீட்டு உரிமையாளர்கள் கூறுவதுண்டு.

கட்டுமான துறையில் ஒரு மாற்ற நிகழ்வாக இந்த 'கூல் ரூப் டைல்ஸ்' அமைகிறது. இந்த டைல்ஸ் அவசியமாக பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

பொதுவாக சுருக்கி அமைப்பது என்பது கட்டடத்தின் மேலே விழும் தண்ணீரை ஒரு பக்கமாக கொண்டு செல்வதற்கும், கட்டடத்தில் படக்கூடிய வெப்பத்தின் அளவை குறைப்பதற்கும் ஒருசேர பயன்படுத்தப்படுவதுதான்.

முன்பு சுண்ணாம்பு கல் பயன்படுத்திவந்த நிலையில் தற்சமயம் இந்த மாற்றம் வந்துள்ளது. பொதுவாக கூல் ரூப் டைல் பதிப்பது நடைமுறையில் இருந்து கொண்டுதான் உள்ளது. நாளடைவில் அத்தகைய டைல்ஸ் பயன்படுத்தும் பொழுது டைல் இணைப்பில் நீர் உட்புகும் அபாயம் உள்ளது.

அதாவது டைல் இணைப்பில் மழைநீர் இறங்கி செல்வதற்கு வழி இல்லாமல் நாளடைவில் கட்டடத்தில் கீழாக இறங்க வாய்ப்புள்ளது. எத்தகைய டைல் பதித்தாலும் 'ஜாயின்ட் பில்லிங்' செய்வதற்கு சிரமப்பட வேண்டும்.

அதில் கூல்ரூப் டைல்ஸ் மட்டும் விதிவிலக்கல்ல. எனவே, கூல் ரூப் டைல் தேர்வைவிட அதை பொருத்தும் முறை மிக முக்கியமானது. இந்த டைல்ஸ் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தால் அதற்கு 10 மி.மீ., தடிமன், 12 மி.மீ., டைல்ஸ் போதுமானது.

கலவை இரண்டு அங்குலமா நான்கு அங்குலமா என்று கேட்டால், அந்த வாட்டத்திற்கு தேவையான கலவையை கொடுத்து, அவற்றை சரியான முறையில் 'லேயிங்' செய்யவேண்டும் என, குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர் பொறியாளர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us