/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குடும்பத்தினரோடு செலவிடும் நேரம் வீணானது இல்லை'
/
'குடும்பத்தினரோடு செலவிடும் நேரம் வீணானது இல்லை'
ADDED : அக் 17, 2024 11:38 PM

கோவை : ''குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுவது, வீணானது கிடையாது; நல்லவை, கெட்டவை குடும்பத்தினரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்,'' என, பேச்சாளர் கோபிநாத் பேசினார்.
கோவை லீ மெரிடியன் ஓட்டலில், கோயம்புத்துார் கட்டுனர்கள், ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் (சிபாகா) ஆண்டு விழா நடந்தது. விழாவில் சங்கத்தின் தலைவர் ராமநாதன் வரவேற்றார். செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். 'சிபாகா' நாள் பற்றி விழா சேர்மன் பழனிசாமி பேசினார்.
தலைமை விருந்தினராக குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின் இணை தாளாளர் சங்கர் வானவராயர் பங்கேற்று பேசினார்.
'டிவி' தொகுப்பாளர் கோபிநாத் பேசியதாவது:
வாழ்க்கையில், அவசர தேவை, அவசிய தேவை என இரண்டு உள்ளது. அவசர தேவைகளை மட்டுமே நிறைவேற்றி விட்டு, அவசிய தேவைகளை நிறைவேற்றாமல் விட்டு விடுகிறோம். நம்மால் மட்டுமே முடியும் என்ற எண்ணத்தை விட்டு விட்டு, பிறருக்கு பணியை பகிர்ந்து கொள்ளுங்கள். பணி மேலாண்மை செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.
வணிக நேரம் மட்டுமின்றி, வேலையை வீட்டிலும் செய்ய வேண்டிய நிலை இப்போது உள்ளது. பலர் குடும்பத்தினரோடு பேசுவதை, நேரம் வீணாகிறது என உணர்கின்றனர். அது தவறு. குடும்பத்தினருடன் நல்லவை, கெட்டவை பகிர்ந்து கொள்வது அவசியம். அப்போது தான் புரிதல் ஏற்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
சங்கத்தின் பொருளாளர் சம்சுதீன் நன்றி தெரிவித்தார்.