/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிமவளம் கொண்டு சென்ற டிப்பர் லாரி பறிமுதல்
/
கனிமவளம் கொண்டு சென்ற டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : மார் 28, 2025 10:10 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் உரிய ஆவணம் இன்றி ஜல்லிக்கற்கள் கொண்டு சென்ற டிப்பர் லாரியை கனிமவளத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் டிப்பர் லாரிகளில் கனிமவள கற்கள், கிராவல் மண், ஜல்லிக்கற்கள் அதிகளவு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கனிமவளத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், காதருதான் மேடு பகுதியில், டிஎன் 41 பிபி 8454 என்ற பதிவு எண் கொண்ட டிப்பர் லாரியை அதிகாரிகள் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. அதிகாரிகளை கண்டதும், லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
கனிமவளத் துறை அதிகாரிகள், லாரியை பறிமுதல் செய்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், டிப்பர் லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.