/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்
/
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்
ADDED : ஏப் 12, 2025 11:35 PM
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே, கிராவல் மண் கடத்திய 2 டிப்பர் லாரிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அறிவுரையின் பேரில், கனிமவள கடத்தலை தடுக்கும் பொருட்டு, சிறுமுகை அருகே புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த, 2 டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, இரண்டு லாரிகளில், 6 யூனிட் கிராவல் மண் இருந்தது.
உரிய அனுமதி இன்றி, ஏற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. லாரியை கிராவல் மண்ணுடன் கைப்பற்றி, சிறுமுகை போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரிகளை ஓட்டி வந்த பெத்திக்குட்டையை சேர்ந்த தங்கராஜ், 52, சிறுமுகையை சேர்ந்த முருகேசன், 50 ஆகியோரை, கைதுசெய்தனர்.--