/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருஇருதய ஆலயத்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
திருஇருதய ஆலயத்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருஇருதய ஆலயத்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருஇருதய ஆலயத்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஜன 15, 2024 12:23 AM

வால்பாறை;வால்பாறை திருஇருதய ஆலயத்தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை திருஇருதய தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை கருமத்தம்பட்டி, துாய பேதுரு கல்வியியல் கல்லுாரியின் தாளாளர் மரியஜோசப், சூலுார் சகாயமாதா ஆலய பங்கு தந்தை ஜோசப்பிரபாகர் ஆகியோர் ஏற்றினர்.
தொடர்ந்து செபமாலை, திருப்பலி நடைபெற்றது. விழாவில் இன்று (15ம் தேதி) கருமலை புனித ஆரோக்கியமாதா திருத்தலம், 21ம் அர்ச்சிப்பு ஆண்டு நாள், பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
விழாவில் வரும், 20ம் தேதி இரவு, 7:30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருஇருதய ஆலயபங்கு தந்தை ஜெகன்ஆண்டனி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.