ADDED : ஜன 21, 2024 11:43 PM

வால்பாறை;வால்பாறை திருஇருதய ஆலயத்தேர்த்திருவிழாவில், நுாற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை திருஇருதய தேர்த்திருவிழா, கடந்த 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை கருமத்தம்பட்டி, துாய பேதுரு கல்வியியல் கல்லுாரியின் தாளாளர் மரியஜோசப், சூலுார் சகாயமாதா ஆலய பங்கு தந்தை ஜோசப்பிரபாகர் ஆகியோர் ஏற்றினர். தொடர்ந்து ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், நேற்று முன் தினம் காலை, 7:00 மணிக்கு வாழைத்தோட்டம் புனித செபாஸ்தியர் சிற்றாலயத்தில், சிறப்பு கூட்டுப்பாடற்திருபலி, ஜெபவழிபாடு நடைபெற்றது.
இரவு, 7:30 மணிக்கு திருஇருதய ஆண்டவர், புனிதசெபாஸ்தியார் திருவுருவம் தாங்கிய தேர்பவனி, வால்பாறை நகரின் முக்கிய வீதிவழியாக சென்று, இரவு ஆலயத்தை சென்றடைந்தது.
தேர்த்திருவிழாவில், நுாற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திரு இருதய ஆலய பங்குதந்தை ஜெகன்ஆண்டனி மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.