/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பூர் மாநகராட்சி குடிநீர் குழாய் மாற்றுவதில் தாமதம்
/
திருப்பூர் மாநகராட்சி குடிநீர் குழாய் மாற்றுவதில் தாமதம்
திருப்பூர் மாநகராட்சி குடிநீர் குழாய் மாற்றுவதில் தாமதம்
திருப்பூர் மாநகராட்சி குடிநீர் குழாய் மாற்றுவதில் தாமதம்
ADDED : ஆக 03, 2025 09:25 PM
மேட்டுப்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி குடிநீர் குழாய் மாற்றியமைக்க, காலதாமதம் ஆவதால், நான்கு வழிசாலை விரிவாக்க பணிகள் பாதிப்பு அடைகிறது என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை, 36 கிலோ மீட்டருக்கு, நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது, 10 மீட்டர் அகலம் உள்ள சாலையை, 70 கோடி ரூபாய் செலவில், 16.20 மீட்டர் அகலம் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அவிநாசி சாலையில், 13 இடங்களில் சிறிய பாலங்களும், பத்து இடங்களில் பெரிய பாலங்களும் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் ரஜினிகாந்த், உதவி பொறியாளர் பூபாலன் ஆகியோர் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையம் அவிநாசி சாலையில் உள்ள, 90 சதவீதம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
50 சதவீதம் மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க காலதாமதம் செய்து வருகிறது.
இதனால் சாலை விரிவாக்கம் பணிகளிலும் தொய்வு ஏற்படுகிறது. எனவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய்களை விரைவாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.