/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
/
திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
ADDED : பிப் 03, 2025 06:49 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில், திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து, பல மாதங்களாக தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடைக்கு செல்கின்றன. சாக்கடை நிரம்பி அருகில் உள்ள கட்டடத்தின் உள்பகுதிக்குள் புகுந்து கட்டடம் பழுதடைந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சாமன்னா பகுதியில் இருந்து, திருப்பூர் மாநகராட்சி மற்றும் வழியோற கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாய் மகாதேவபுரம், நெல்லித்துறை சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்கிறது. இதில் நெல்லித்துறை சாலையில் ஊட்டி ரயில் செல்லும் ரயில்வே கேட் அருகில் ராட்சத குழாய் உள்ளது. இக்குழாய் உடைந்து பல மாதங்களாக, தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் செல்கிறது. சாக்கடை வடிகால் நிறைந்து அருகில் இருக்கும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் விடுதி கட்டடத்தின் உள் செல்கிறது. அக்கட்டடம் மிகவும் பழமையான கட்டடம் என்பதால், தண்ணீர் எப்போதும் சூழ்ந்து தேங்கி நிற்பதால், கட்டடம் பழுதடைந்து வருகிறது.
அதே போல், மகாதேவபுரத்தில் சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு முறையும் தண்ணீர் செல்லும் போது சாலையின் நடுவே தண்ணீர் செல்கிறது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரியமும், மேட்டுப்பாளையம் நகராட்சியும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

