/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்வள ஆதாரத்துறை இணையதளத்தில் திருப்பூர் மாவட்டத்தைக் காணோம்
/
நீர்வள ஆதாரத்துறை இணையதளத்தில் திருப்பூர் மாவட்டத்தைக் காணோம்
நீர்வள ஆதாரத்துறை இணையதளத்தில் திருப்பூர் மாவட்டத்தைக் காணோம்
நீர்வள ஆதாரத்துறை இணையதளத்தில் திருப்பூர் மாவட்டத்தைக் காணோம்
ADDED : பிப் 04, 2024 02:18 AM

திருப்பூர்:பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள நீர் வள ஆதாரத்துறைக்கான இணையதளம் 'அப்டேட்' செய்யப்படாமல் உள்ளது.
பொதுப்பணித்துறையின் ஒரு பிரிவாக நீர்வள ஆதாரத்துறை செயல்படுகிறது. இந்த அமைப்பு மாநிலம் முழுவதும் சென்னை, மதுரை, திருச்சி, பொள்ளாச்சி ஆகிய மண்டலங்களாக அமைந்துள்ளது.
இதில் பொள்ளாச்சி மண்டலம் தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டில், ஒரு துணை மண்டல பொறியாளர் மற்றும் மூன்று கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோரின் கீழ் இயங்கி வருகிறது.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.இம்மண்டலத்தில் உள்ள நீர் ஆதாரங்களான, அணைகள், ஆறுகள், குளங்கள், வாய்க்கால் ஆகியன இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த துறைக்கென தனிப்பட்ட இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பொள்ளாச்சி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் ஆதாரங்கள் மற்றும் அமைவிடங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வரைபடத்தில் 'திருப்பூர் மாவட்டம்' என்பதே குறிப்பிடப்படாமல் உள்ளது. கோவை, ஈரோடு மாவட்டங்களின் சில பகுதிகள் இணைத்து திருப்பூர் மாவட்டமாக அமைக்கப்பட்டது.
அவ்வகையில் ஏறத்தாழ புதிய மாவட்டம் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும், நீர் வள ஆதாரத் துறையின் இணைய தளம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருப்பது போல் இதன் இணைய தளத்தில் தகவல் உள்ளது,