/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை ரவுடிகளை கைது செய்ய திருப்பூர் போலீஸ்காரர் 'சாதுர்யம்'
/
சென்னை ரவுடிகளை கைது செய்ய திருப்பூர் போலீஸ்காரர் 'சாதுர்யம்'
சென்னை ரவுடிகளை கைது செய்ய திருப்பூர் போலீஸ்காரர் 'சாதுர்யம்'
சென்னை ரவுடிகளை கைது செய்ய திருப்பூர் போலீஸ்காரர் 'சாதுர்யம்'
ADDED : ஜன 29, 2024 12:49 AM

திருப்பூர்;கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய மூன்று ரவுடிகளை தப்பிக்கவிடாதிருக்க, அவர்கள் வந்த காருக்குள் உருண்டு புரண்டு போலீஸ்காரர் சாதுர்யம் காட்டினார்.
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் இருதரப்பினர் இடையே, கடந்த 26ம் தேதி மோதல் ஏற்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, பாலாஜி, 26, இவரது சகோதரர் அழகுராஜா, 25, விஷ்ணு, 24 ஆகியோரை தேடிவந்தனர். மூவரும் ரவுடிகளாக வலம் வந்ததும், கொலை, அடிதடி உள்பட பல வழக்குகளில் தொடர்புடையதும் தெரியவந்தது.
இவர்கள் திருப்பூரில் இருப்பதை அறிந்து, திருவல்லிக்கேணி போலீசார் தகவல் அளித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, இவர்களை திருப்பூர் மாநகர போலீசார் மடக்கிப்பிடித்தனர். எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் வந்து, மூன்று பேரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்து அழைத்து சென்றனர்.
போலீசார் கூறுகையில், ''இவர்கள் கடந்த, 2021 மார்ச் 4ம் தேதி மயிலாப்பூர் பிரபல ரவுடி சிவகுமாரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்கள். கொல்லப்பட்ட சிவகுமார், கடந்த 1997ல் சகோதரர்கள் பாலாஜி, அழகுராஜா ஆகியோரின் தந்தை தோட்டம் சேகரை கொலை செய்துள்ளார். இதற்கு பழிக்கு பழியாக இவர்கள் சிவகுமாரை கொன்றனர்'' என்றனர்.
சிக்கியது எப்படி?
கடந்த, 26ம் தேதி தப்பிய, மூவரும் திருப்பூரில் உள்ள அழகுராஜாவின் காதலியை பார்க்க காரில் வந்தனர். நுண்ணறிவுப் பிரிவு போலீஸ்காரர் ஜெயச்சந்திரன், இவர்களது கார், பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் முன் நிற்பது குறித்து ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து விட்டு, கண்காணித்தார். மூவரும், காரில் ஏறி புறப்பட்ட ஆயத்தமானபோது, 'எங்கள் அண்ணன் காரை, எதற்கு இடித்துவிட்டு வந்தீர்கள்' என்று கேட்டு, காருக்குள் புகுந்து ஜெயச்சந்திரன் உருண்டு புரண்டார். 'எங்கள் அண்ணன் வரும் வரை காத்திருங்கள்' என்று சொல்ல, மூவரம் குழம்பி தவித்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் போலீஸ்காரர் என்பதை அறிந்த அவர்கள், தப்பிக்க முயற்சித்தனர். தொடர்ந்து பேச்சு கொடுத்து ஜெயச்சந்திரன் சமாளித்தார். அதற்குள், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, மூன்று பேரையும் பிடித்தனர்.