ADDED : செப் 30, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிவுறுத்தல்படி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் அருணேஸ்வரன் தலைமையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கமிட்டி மற்றும் துணை அமைப்பு நிர்வாகிகளுடன் இணைந்து உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கையை வார்டு வாரியாக நடத்துவது.
வார்டு வாரியான மக்கள் கோரிக்கை மனுக்களை சேகரித்து வாரந்தோறும் முதல்வரின் தனிப்பிரிவில் பதிவு செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.