/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு; இலவச பயிற்சியில் பங்கேற்கலாம்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு; இலவச பயிற்சியில் பங்கேற்கலாம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு; இலவச பயிற்சியில் பங்கேற்கலாம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு; இலவச பயிற்சியில் பங்கேற்கலாம்
ADDED : ஜன 31, 2025 11:36 PM
பொள்ளாச்சி; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி இன்று துவங்குகிறது.
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும்,கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டு நிலையத்தில் படித்து,தற்போது வரை, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பணியை பெற்றுள்ளனர்.
தற்போது,இந்நிலையத்தால் அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும்,குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு,இன்று,1ம் தேதிதுவங்குகிறது. இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினத்தை சார்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது, பிற மாணவர்களும் பங்கேற்று பயனடையலாம். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள், 94990 55939 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
இப்பயிற்சி வகுப்பு குறித்து, மேலும் விபரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.