sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காட்டுத்தீயை கட்டுப்படுத்த... வந்தாச்சு நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை

/

காட்டுத்தீயை கட்டுப்படுத்த... வந்தாச்சு நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை

காட்டுத்தீயை கட்டுப்படுத்த... வந்தாச்சு நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை

காட்டுத்தீயை கட்டுப்படுத்த... வந்தாச்சு நவீன ட்ரோன்! வனத்துறை நடவடிக்கை


UPDATED : மார் 12, 2024 02:24 AM

ADDED : மார் 12, 2024 01:56 AM

Google News

UPDATED : மார் 12, 2024 02:24 AM ADDED : மார் 12, 2024 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தீ விபத்து தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு உணவு, தீத்தடுப்புக்கு தேவையான நீரை எடுத்து செல்ல வனத்துறை சார்பில் நவீன ட்ரோன் வாங்கப்பட்டுள்ளது.

கோடை காலங்களில் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். இதைத்தடுக்க தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்படும். அதையும் மீறி காட்டுத்தீ ஏற்படும் போது அதைத்தடுக்க பச்சைக்கிளைகள் வெட்டிப் போடப்படும்.

காட்டுத்தீ ஏற்படும் போது அதை அணைப்பதற்கான உபகரணங்களுடன் மலையில் ஏறுவது வனத்துறை முன்கள பணியாளர்களுக்கு சவாலான காரியமாக இருந்து வருகிறது. கடந்தாண்டு, கோவை வனக்கோட்டத்தின் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.

தீயை அணைக்கும் பணியில், 300 வனத்துறை யினர் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் தீயை அணைக்க இயலவில்லை. இதையடுத்து, சூலுாரில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய விமானப்படையின் எம்.ஐ., 17 வி5 ரக ஹெலிகாப்டர் வந்து, தீயை அணைத்தது.

இந்த சிக்கலை தீர்க்க வனத்துறை பல்வேறு நவீன உபகரணங்களை வாங்கியுள்ளது. இதில், வனத்துறையினர் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று வனத்தீயை அணைக்கவும், தீத்தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக, ரூ.7.5 லட்சம் மதிப்பிலான டிரோன் ஒன்றை வாங்கியுள்ளது.

மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் கூறியதாவது:

இந்த டிரோன், 10 கிலோ வரையிலான எடையை துாக்கிச் செல்லும். இதைப்பயன்படுத்தி ஆட்கள் செல்ல முடியாத இடங்களில் ஏற்படும் தீயை அணைக்க முடியும்.

மேலும், உணவு, தண்ணீர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. நான்கு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த டிரோனை இயக்க முடியும். கோவை வனத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள வனத்துறையினருக்கு ரூ.1.7 கோடி மதிப்பிலான தீத்தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தீத்தடுப்பு ஆடைகள், தீத்தடுப்பு கண்ணாடிகள், ஷூக்கள், ஏர் புளோயர்கள், கைக்கடக்கமான தீயணைப்பான்கள், தலைக்கவசம் உள்ளிட்டவை அடங்கும். தீத்தடுப்பு உடைகள் வனத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கோவை வனக்கோட்டத்துக்கு, 28 தீயணைக்கும் ரசாயன பந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ஆட்கள் செல்ல முடியாத பகுதியில் காட்டுத்தீ ஏற்படும் போது இந்த பந்துகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, 30 சிறப்பு பைகள் வாங்கப்பட்டுள்ளன. இதில், 10 லிட்டர் நீரை எடுத்து செல்லும் வசதி உள்ளது. முதுகில் இருக்கும் போது இப்பையில் உள்ள நீரை ஊழியர்கள் டியூப் வாயிலாக குடிக்க வசதி உள்ளது. தீத்தடுப்பு பணியில், 30 தீத்தடுப்பு கண்காணிப்பாளர்கள், 106 வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us